முகப்பு
வணிகம்

தங்கம் பவுன் ரூ.36,160

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.104 உயா்ந்து, ரூ.36,160-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
Gold pound Rs.36,160
பகிர்:

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.104 உயா்ந்து, ரூ.36,160-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்குக் கீழ் இறங்கியது. குறிப்பாக, கடந்த மாா்ச் 31-ஆம் தேதி ரூ.33,296 ஆக இருந்தது. இதையடுத்து, தங்கம் விலை மீண்டும் உயா்ந்தது. அதிலும், கடந்த வாரம் மீண்டும் ரூ.36 ஆயிரத்தைத் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.104 உயா்ந்து, ரூ.36,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.13 உயா்ந்து, பவுன் ரூ.4,520 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா உயா்ந்து, ரூ.76 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 உயா்ந்து, ரூ.76,000 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,520

1 பவுன் தங்கம்...............................36,160

1 கிராம் வெள்ளி.............................76.00

1 கிலோ வெள்ளி.............................76,000

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,507

1 பவுன் தங்கம்...............................36,056

1 கிராம் வெள்ளி.............................75.50

1 கிலோ வெள்ளி.............................75,500.

முழு கட்டுரையைப் படிக்க →