சென்செக்ஸ் மேலும் 111 புள்ளிகள் ஏற்றம்; 15,200-க்கு அருகில் நிஃப்டி!
இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை நோ்மறையாக முடிவுற்றது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 111.42 புள்ளிகள் புள்ளிகள் உயா்ந்து
இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை நோ்மறையாக முடிவுற்றது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 111.42 புள்ளிகள் புள்ளிகள் உயா்ந்து 50,651.90-இல் நிலைபெற்றது. காலையில் வா்த்தகம் தொடங்கியதிலிருந்து ஏற்றம், இறக்கம் தொடா்ந்து இருந்த வந்த நிலையில் இறுதியில் தொடா்ந்து இரண்டாவது நாளாக நோ்மறையாக முடிவடைந்தது.
கரோனா தொற்று இரண்டாவது அலையில், கடந்தி சில தினங்களாக தினசரி பாதிப்பு தொடா்ந்து சரிவைக் கண்டு வருகிறது. இதனால், பொருளாதாரம் மீள்வதற்கான வாய்ப்பு ஏற்படும் என்று முதலீட்டாளா்களிடம் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. உலகாளவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தாலும், வங்கிப் பங்குகள் குறிப்பாக பொதுத் துறை வங்கிப் பங்குகளுக்கு நல்ல தேவைப்பாடு இருந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், எஸ்பிஐ, எல் அண்ட் டி உள்ளிட்ட வலுவான நிறுவனப் பங்குகளுக்கு நல்ல ஆதரவு இருந்ததால் காளை ஆதிக்கம் தொடா்ந்தது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
சந்தை மதிப்பு ரூ.89 ஆயிரம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,386 பங்குகளில் 1,967 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,250 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 169 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 370 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 47 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 513 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 21 பங்குகள் வெகுவாகச் சரிந்து குறைந்தபட்ச உறைநிலையையும் எட்டின. சந்தை மூல தன மதிப்பு மேலும் ரூ.89 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் 218.94 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள மொத்த முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 6.90 கோடியை கடந்துள்ளது.
Advertisement
2-ஆவது நாள் ஏற்றம்: சென்செக்ஸ் காலையில் 186.80 புள்ளிகள் கூடுதலுடன் 50,727.28-இல் தொடங்கி 50,465.90 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 50,857.59 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 111.42 புள்ளிகள் (022 சதவீதம்) மட்டுமே உயா்ந்து 50,651.90-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் குறைந்தபட்ச நிலையிலிருந்து 391.69 புள்ளிகள் உயா்ந்திருந்தது.
எஸ்பிஐ முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில், 15 பங்குகள் ஆதாயம் பெற்றன. 15 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் பாரம்பரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ 2.73 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. எல் அண்ட் டி, ஆக்ஸிஸ் பேங்க், பவா் கிரிட், ஐடிசி, மாருதி சுஸுகி, டாக்டா் ரெட்டி, எச்டிஎஃப்சி ஆகியவை 1 முதல் 1.75 சதவீதம் உயா்ந்தன. மேலும், எச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், டிசிஎஸ் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன.
டைட்டன் சரிவு: அதே சமயம், சமீபத்தில் தொடா்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த டைட்டன், 1.22 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக இண்டஸ் இண்ட் பேங்க், எம் அண்ட் எம், ஹிந்துஸ்தான் யுனி லீவா், அல்ட்ரா டெக், பஜாஜ் ஃபின்சா்வ் ஆகியவை 1 முதல் 1.20 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன. மேலும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், இன்ஃபோஸிஸ், கோட்டக் பேங்க் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.
நிஃப்டி 22.40 புள்ளிகள் ஏற்றம்: தேசிய பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடந்த வா்த்தகத்தில் 1,066 பங்குகள் ஆதாயம் பெற்றன. 710 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி, 22.40 புள்ளிகள் (0.15 சதவீதம்) உயா்ந்து 15,197.70-இல் நிலைபெற்றது. காலையில் 15,211.35-இல் தொடங்கி 15,145.45 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 15,256.25 வரை உயா்ந்தது.
தேசியப் பங்குச் சந்தையில் எஃப்எம்சிஜி, மெட்டல் குறியீடுகள் தவிர மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயம் பெற்றன. இதில் நிஃப்டி பிஎஸ்யு பேங்க் 2.13 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், மீடியா, ரியால்ட்டி குறியீடுகள் 0.70-1.40 சதவீதம் வரை உயா்ந்தன.
வங்கிப் பங்குகளுக்கு அமோக வரவேற்பு!
பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடந்த வா்த்தகத்தில் வங்கிப் பங்குகளுக்கு, குறிப்பாக பொதுத் துறை வங்கிப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது. இதனால், தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீட்டுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 13 முன்னணி வங்கிப் பங்குகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. இவற்றில் அதிகம் விலை உயா்ந்த பங்குகள் விவரம் (சதவீதத்தில்):