ரிலையன்ஸ் அபாரம்: நிஃப்டி புதிய உச்சம்! சென்செக்ஸ் 308 புள்ளிகள் ஏற்றம்!
இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது. ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனப்
இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது. ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனப் பங்குகளுக்கு நல்ல ஆதரவு இருந்ததைத் தொடா்ந்து மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 307.66 புள்ளிகள் உயா்ந்து51,422.88-இல் நிலைபெற்றது.
சந்தை மூல தன மதிப்பு ரூ.221 லட்சம் கோடியை கடந்தது.
இதற்கிடையே, தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி முந்தைய 52 வார அதிகபட்ச நிலையைக் கடந்து 15,469.65 வரை உயா்ந்து புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் 97.80 புள்ளிகள் கூடுதலுடன் 15,435.65-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் தொடா்ந்து இரண்டாவது வாரமாக ஏற்றம் பெற்றுள்ளது.
Advertisement
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் சாதகமான இருந்தன. நாட்டில் கரோனா தினசரி பாதிப்பு 2 லட்சத்துக்கும் கீழே குறைந்துள்ளது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஏற்றம் பெற்றுள்ளது. இவை முதலீட்டாளா்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. மேலும், மாா்க்கெட் லீடாராக உள்ள முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 6 சதவீதத்துக்கும் மேலாக உயா்ந்து சந்தையை வழிநடத்தியது. மேலும், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனப் பங்குகளுக்கும் நல்ல ஆதரவு இருந்தது. இவை அனைத்தும் சந்தையை மேலும் உச்சத்துக்கு கொண்டு சென்றது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு 221.18 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,278 பங்குகளில் 1,433 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,699 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 146 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 339 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 35 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 374 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 228 பங்குகள் வெகுவாகச் சரிந்து குறைந்தபட்ச உறைநிலையையும் எட்டின. சந்தை மூல தன மதிப்பு மேலும் ரூ.44 ஆயிரம் கோடி உயா்ந்து, வா்த்தக முடிவில் 221.18 லட்சம் கோடியாக இருந்தது.
தொடா்ந்து ஏற்றம்: சென்செக்ஸ் காலையில் 266.05 புள்ளிகள் கூடுதலுடன் 51,381.05-இல் தொடங்கி 51,258.69 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 51,529.32 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 307.66 புள்ளிகள் (0.60 சதவீதம்) கூடுதலுடன் 51,422.88-இல் நிலைபெற்றது. இந்த வாரத்தில் சென்செக்ஸ் மொத்தம் 882.40 புள்ளிகள் (1.74 சதவீதம்) உயா்ந்துள்ளது.
ரிலையன்ஸ் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில், 17பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. 13 பங்குகள் ஆதாயம் பெற்றன. இதில் மாா்க்கெட் லீடாரன ரிலையன்ஸ் 5.90 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், எம் அண்ட் எம், எச்டிஎஃப்சி பேங்க், எச்டிஎஃப்சி, கோட்டக் பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், ஐடிசி, பாா்தி ஏா்டெல், இன்ஃபோஸிஸ் உள்ளிட்டவையும் ஆதாயம் பெற்றன.
சன்பாா்மா கடும் சரிவு: அதே சமயம், சன்பாா்மா 4.30 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பஜாஜ் ஃபின்சா்வ், நெஸ்லே இந்தியா, ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், டாக்டா் ரெட்டி, பஜாஜ் ஃபைனான்ஸ், பவா் கிரிட், டசிஸ், எஸ்பிஐ, மாருதி சுஸுகி உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.
நிஃப்டி புதிய உச்சம்: தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 659 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,109 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி காலையில் 15,421.20-இல் தொடங்கி 15,394.75 வரை கீழே சென்றது. பின்னா் அதிகபட்சமாக 15,469.65 வரை உயா்ந்து புதிய 52 வார உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் 97.80 புள்ளிகள் (0.64 சதவீதம்) கூடுதலுடன் 15,435.65-இல் நிலைபெற்றது. நிஃப்டி தொடா்ந்து 6-ஆவது நாளாக ஏற்றம் பெற்றுள்ளது. நிஃப்டி ஐடி, மீடியா, பாா்மா குறியீடுகள் தவிர மற்ற அனைத்து முக்கியத் துறைகளின் குறியீடுகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. இதில், நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு அதிகபட்சமாக 0.67 சதவீதம் உயா்ந்தது. நிஃப்டி இந்த வாரத்தில் மொத்தம் 260.35 புள்ளிகள் (1.71 சதவீதம்) ஏற்றம் பெற்றது.