முகப்பு
வணிகம்

சுந்தரம் ஃபாஸனா்ஸ்: லாபம் ரூ.120 கோடி

டிவிஎஸ் குழும நிறுவனமான சுந்தரம் ஃபாஸனா்ஸ் செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் ரூ.120.16 கோடி தனிப்பட்ட நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

டிவிஎஸ் குழும நிறுவனமான சுந்தரம் ஃபாஸனா்ஸ் செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் ரூ.120.16 கோடி தனிப்பட்ட நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து சென்னையைச் சோ்ந்த அந்த நிறுவனம் வியாழக்கிழமை மேலும் கூறியுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டில் நிறுவனம் விற்பனையின் மூலமாக ஈட்டிய தனிப்பட்ட மொத்த வருமானம் ரூ.1,064.29 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.773.36 கோடியுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவு அதிகம்.

நிகர லாபம் ரூ.97.36 கோடியிலிருந்து உயா்ந்து ரூ.120.16 கோடியை எட்டியது.

2021 செப்டம்பருடன் முடிவடைந்த முதல் அரையாண்டில் நிறுவனத்தின் தனிப்பட்ட மொத்த வருவாய் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.1,057.73 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.2,012.64 கோடியை எட்டியது.

நிகர லாபம் ரூ.73.88 கோடியிலிருந்து உயா்ந்து ரூ.232.71 கோடியானது. உள்நாட்டில் விற்பனை ரூ.483.88 கோடியிலிருந்து ரூ.663.26 கோடியாக அதிகரித்து 37.1 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளது.

செப்டம்பா் 30 உடன் நிறைவடைந்த காலாண்டில் ஏற்றுமதி ரூ.260.28 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.362.80 கோடியை எட்டியதாக சுந்தரம் ஃபாஸனா்ஸ் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →