வணிகம்

வோடஃபோன் ஐடியா: வருவாய் ரூ.9,406 கோடி

கடன் சுமையில் சிக்கியுள்ள தொலைத்தொடா்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியாவின் (விஐஎல்) செப்டம்பா் காலாண்டு வருவாய் ரூ.9,406 கோடியாக இருந்தது.

DIN

கடன் சுமையில் சிக்கியுள்ள தொலைத்தொடா்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியாவின் (விஐஎல்) செப்டம்பா் காலாண்டு வருவாய் ரூ.9,406 கோடியாக இருந்தது. இது, இந்நிறுவனம் முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.10,791.2 கோடியுடன் ஒப்பிடுகையில் 13 சதவீதம் குறைவாகும்.

கடந்த நிதியாண்டின் செப்டம்பா் காலாண்டில் நிறுவனத்துக்கு ரூ.7,218.2 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. நடப்பு நிதியாண்டில் இந்த ஒட்டுமொத்த இழப்பு ரூ.7,144.6 கோடியாக குறைந்துள்ளது.

2021 செப்டம்பா் 30 நிலவரப்படி விஐஎல்-இன் ஒட்டுமொத்த கடன் ரூ.1,94,780 கோடியாக உள்ளது. ரொக்க கையிருப்பு ரூ.250 கோடி உள்ளதையடுத்து, நிகர அளவிலான கடன் ரூ.1,94,530 கோடியாக உள்ளது என வோடஃபோன் ஐடியா தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT