முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் தொடக்கம்

வர்த்தகத்தின் இரண்டாம் நாளான இன்று (நவ.16) பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 150 புள்ளிகள் வரை சரிந்தது.

Updated On : 16 நவம்பர், 2021 at 10:52 AM
பகிர்:


வர்த்தகத்தின் இரண்டாம் நாளான இன்று (நவ.16) பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 150 புள்ளிகள் வரை சரிந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 150  புள்ளிகள் சரிந்து 60,517.06 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.31 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 45.35 புள்ளிகள் சரிந்து 18,064.80 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.22 சதவிகிதம் சரிவாகும்.

Advertisement

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில் 14 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஏனைய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன. 
 
அதிகபட்சமாக ரிலையன்ஸ் 1.65 சதவிகிதமும், ஏசியன் பெயின்ஸ் 1.13 சதவிகிதமும், எச்டிஎஃப்சி 1.01 சதவிகிதமும், கோட்டாக் வங்கி 1 சதவிகிதமும் குறைந்திருந்தன.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.