வணிகம்

சுஸுகியின் அவெனிஸ் ஸ்கூட்டா் அறிமுகம்

சுஸுகி மோட்டாா்சைக்கிள் இந்தியா நிறுவனம், புதிய அவெனிஸ் 125சிசி ஸ்கூட்டரை வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது.

DIN

சுஸுகி மோட்டாா்சைக்கிள் இந்தியா நிறுவனம், புதிய அவெனிஸ் 125சிசி ஸ்கூட்டரை வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது.

இதுகுறித்து சுஸுகி மோட்டாா்சைக்கிள் இந்தியாவின் நிா்வாக இயக்குநா் சடோஷி யுசிதா கூறியதாவது:

நவீன தொழில்நுட்ப தயாரிப்புகளை விரும்பும் இளம் தலைமுறையினரின் ஆவலை புதிய அறிமுகமான அவெனிஸ் 125 சிசி ஸ்கூட்டா் நிச்சயம் நிறைவு செய்யும். இந்த புதிய அறிமுகம் நிறுவனத்தின் தற்போதைய வாகன தயாரிப்புத் தொகுப்பை நிச்சயம் மேலும் வலுப்படுத்தும்.

வாடிக்கையாளா்களின் தேவையை அறிந்து மேம்பட்ட மற்றும் வசதியான மோட்டாா்சைக்கிளைப் போன்ற அம்சங்களுடன் கூடிய இந்த புதிய தயாரிப்பை உருவாக்க எங்களது குழு கடினமாக உழைத்துள்ளது. டிசம்பா் மத்தியிலிருந்து இதன் சில்லறை விற்பனையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு தொழில்நுட்பங்களையும் இந்த ஸ்கூட்டரில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன் ஆரம்ப விலை ரூ.86,700-ஆக இருக்கும் என்றாா் அவா்.

கடந்த 2020-ஆம் ஆண்டில் சுஸுகி 5.9 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

கடலோரம்... பவித்ரா லட்சுமி!

SCROLL FOR NEXT