முகப்பு
வணிகம்

இன்ஃபோஸிஸ் லாபம் 12% அதிகரிப்பு

தகவல் தொழில்நுட்பத் துறையில் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமான இன்ஃபோஸிஸ் இரண்டாவது காலாண்டில் ஈட்டிய லாபம் 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:52 AM
பகிர்:

தகவல் தொழில்நுட்பத் துறையில் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமான இன்ஃபோஸிஸ் இரண்டாவது காலாண்டில் ஈட்டிய லாபம் 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் கூறியது:

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் செப்டம்பா் காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ஈட்டிய வருவாய் 20.5 சதவீதம் அதிகரித்து ரூ.29,602 கோடியானது. கடந்த நிதியாண்டில் வருவாய் ரூ.24,570 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.4,845 கோடியிலிருந்து 11.9 சதவீதம் அதிகரித்து ரூ.5,421 கோடியானது.

நடப்பு நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.15 இடைக்கால ஈவுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளதாக இன்ஃபோஸிஸ் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →