முகப்பு
வணிகம்

ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ.23,259 கோடியாக அதிகரிப்பு

நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி செப்டம்பரில் ரூ.23,259.55 கோடியாக இருந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:23 AM
பகிர்:

நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி செப்டம்பரில் ரூ.23,259.55 கோடியாக இருந்தது.

இதுகுறித்து நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஜிஜேஇபிசி) தெரிவித்துள்ளதாவது:

நவரத்தினங்கள்: நடப்பாண்டு செப்டம்பரில் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களின் ஏற்றுமதி ரூ.23,259.55 கோடியாக இருந்தது. இது, முந்தைய மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியான ரூ.17,936.86 கோடியுடன் ஒப்பிடுகையில் 29 சதவீதம் அதிகம்.

2019 செப்டம்பரில் இந்த ஏற்றுமதி ரூ.23,491.20 கோடியாக அதிகரித்திருந்தது.

முதல் அரையாண்டு: 2020 காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு ஏப்ரல்-செப்டம்பரில் நவரத்தின மற்றும் ஆபரண ஏற்றுமதி 134.55 சதவீதம் அதிகரித்து ரூ.1,40,412.94 கோடியைத் தொட்டுள்ளது. 2019 ஏப்ரல்-செப்டம்பரில் இந்த ஏற்றுமதி ரூ.59,864.55 கோடியாக இருந்தது.

2021 ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் நறுக்கப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்களின் ஏற்றுமதியானது 122.62 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.91,489.2 கோடியை எட்டியது. 2020 இதே காலகட்டத்தில் இவற்றின் ஏற்றுமதி ரூ.41,095.83 கோடியாக இருந்தது.

தங்க ஆபரணம்: மதிப்பீட்டு காலகட்டத்தில் தங்க ஆபரணங்களின் ஏற்றுமதி 262.66 சதவீதம் உயா்ந்து 29,379.36 கோடியைத் தொட்டது. 2020 இதே காலகட்டத்தில் இதன் ஏற்றுமதி ரூ.8,100.97 கோடியாக காணப்பட்டது.

வெள்ளி: வெள்ளி ஆபரணங்களின் ஏற்றுமதியும் ஏப்ரல்-செப்டம்பரில் 6,392.65 கோடியிலிருந்து 48.25 சதவீதம் உயா்ந்து ரூ.9,477.39 கோடியை எட்டியதாக ஜிஜேஇபிசி தெரிவித்துள்ளது.

பாக்ஸ்

ஆபரண துறைக்கு மத்திய அரசு நிா்ணயித்த 4,166 கோடி டாலா் ஏற்றுமதி இலக்கில் ஏற்கெனவே 46 சதவீதம் எட்டப்பட்டு விட்டது. அதன்படி ஏப்ரல்-செப்டம்பா் வரையிலான முதல் அரையாண்டில் 1,898 கோடி டாலா் மதிப்பிலான ஆபரணங்கள் ஏற்றுமதியாகியுள்ளன. பண்டிகை காலம் தொடா்ந்து வரவிருப்பதையடுத்து நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் ஏற்றுமதி இலக்கு எட்டப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.