வணிகம்

வாழ்நாள் பாதுகாப்பிற்கு உறுதி: நோக்கியா அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட்போன்

DIN


வாழ்நாள் பாதுகாப்பிற்கு உறுதியளிக்கும் வகையில் நோக்கியா நிறுவனம் புதிய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்யவுள்ளது.

கீழே விழுந்தாலும் உடையாத வகையில் ராணுவத் தரத்தின் அடிப்படையிலும், உருகுலையாத வகையிலும் நோக்கியா எக்ஸ்.ஆர் 20 என்ற ஸ்மார்ட் போனை நோக்கியா தயாரித்துள்ளது.

அல்ட்ரா நீலம் மற்றும் கிரானைட் வண்ணங்களில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போனின் விலை ரூ.46,999-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

6GB RAM மற்றும் 128GB உள்நினைவகத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போனில் 4,630mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்புறம் 48MP திறன் கொண்ட கேமராவும், 13MP வைட் ஆங்கில் கேமராவும் 8MP முன்பக்க கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன்கள் விற்பனை அங்காடிகளிலும், இணைய வர்த்தக நிறுவனங்களிலும், நோக்கியாவின் அதிகாரப்பூர்வ இணையதளங்களிலும் கிடைக்கும். 

இதற்கான முன்பதிவு அக்டோபர் 20 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அக்டோபர் 30-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுவதாக நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு நோக்கியா ஸ்மார்ட் போனுடன் சேர்த்து ரூ.3,599 மதிப்புள்ள இயர்பட்ஸ் வழங்கப்படும் எனவும் நோக்கியா அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் துணைத் தலைவர் சன்மீத் சிங் கோச்சார் கூறியதாவது, நவீன அம்சங்களுடைய ஸ்மார்ட்போனை எதிர்பார்ப்பது மட்டுமல்லாமல் அது நீண்ட காலம் நீடிக்க வேண்டும் எனவும் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். 

நோக்கியா எக்ஸ்.ஆர் 20 ஸ்மார்ட்போன் பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகு வாழ்நாள் பாதுகாப்பிற்கான உறுதியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

கீழே போட்டு, அடிக்கடி உடைத்து பரிசோதனை செய்யப்பட்டதில் இந்த ஸ்மார்ட்போன் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT