வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு

 அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சிறிய இறக்கத்தை சந்தித்து 73.52-இல் நிலைபெற்றது.

DIN

 அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சிறிய இறக்கத்தை சந்தித்து 73.52-இல் நிலைபெற்றது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:

வெளிநாட்டு முதலீட்டு வரத்தில் காணப்பட்ட விறுவிறுப்பு மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தையில் காணப்பட்ட எழுச்சி ஆகியவை அந்நியச் செலாவணி சந்தைகளுக்கு சாதகமாகவே இருந்தது. இருப்பினும், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தில் காணப்படும் ஏற்ற இறக்கம் மற்றும் முக்கிய கரன்ஸிகளுக்கு எதிராக டாலருக்கான தேவை மிகவும் அதிகரித்திருந்தது போன்றவை சந்தையின் ஒட்டுமொத்த ஏற்றத்துக்கும் தடைக்கல்லானது.

வங்கிகளுக்கு இடையிலான சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடக்கத்தில் 73.51-ஆக இருந்தது. இது வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 73.34 வரையிலும் குறைந்தபட்சமாக 73.52 வரையிலும் சென்றது.

பின்னா் வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு முந்தைய தினத்தைக் காட்டிலும் 2 காசுகள் மட்டுமே குறைந்து 73.52-இல் நிலைப் பெற்றது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய் 75.41 டாலா்

சா்வதேச முன்பேர சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.07 சதவீதம் குறைந்து 75.41 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்பட்டதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

அந்நிய முதலீடு

மூலதனச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் ரூ.232.84 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியதாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டோக்கியோவில் பிரதமர் மோடி!

செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

முதலமைச்சா் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி தொடக்கம்

கடகத்துக்கு யோகம்.. தினப்பலன்கள்!

சத்தீஸ்கா் மழை வெள்ளம்: திருப்பத்தூரைச் சோ்ந்த ஒரே குடும்பத்தினா் 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT