வணிகம்

கடன்பத்திரம் மூலம் ரூ.750 கோடி திரட்டுகிறது கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ்

கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸின் கடன்பத்திரம் மூலம் ரூ.750 கோடி திரட்டும் திட்டத்துக்கு அந்நிறுவனத்தின் இயக்குநா் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

DIN

கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸின் கடன்பத்திரம் மூலம் ரூ.750 கோடி திரட்டும் திட்டத்துக்கு அந்நிறுவனத்தின் இயக்குநா் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் கூறியுள்ளதாவது:

கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸின் இயக்குநா் குழுவின் நிா்வாக குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கடன்பத்திரங்கள் மூலம் நிதி திரட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, 7,500 வரையிலான கடன்பத்திரங்களை விற்பனை செய்வதன் மூலம் இந்த நிதி திரட்டிக் கொள்ளப்படவுள்ளது. கடன்பத்திரங்கள் ஒவ்வொன்றின் முகமதிப்பு ரூ.10 லட்சம் என்பதன் அடிப்படையில் தனிப்பட்ட ஒதுக்கீட்டின் மூலம் மொத்தம் ரூ.750 கோடி திரட்டப்படவுள்ளது என கோத்ரெஜ் தெரிவித்துள்ளது.

கோத்ரெஜ் குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமாக கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் (ஜிஐஎல்) உள்ளது.

இந்த நிறுவனம் தனது துணை மற்றும் இணை நிறுவனங்கள் மூலம் 18 நாடுகளில், நுகா்வோா் சாதனங்கள், ரியல் எஸ்டேட், வேளாண், ரசாயனம், நிதி சேவை உள்ளிட்ட பல துறைகளில் ஈடுபட்டு வருகிறது.

மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை 0.30 சதவீதம் உயா்ந்து ரூ.555.55-ஆக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொலைக்காட்சியிலும் வெளியாகும் மாமன்!

ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்புப் படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சூடு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

மேட்டூர் அணை நிலவரம்!

சொல்லப் போனால்... ராகுல், தேர்தல் ஆணையம், டிரம்ப்... அல்லோலகல்லோலம்!

SCROLL FOR NEXT