ரூ.13 லட்சம் மதிப்புள்ள சோனி ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம் 
வணிகம்

ரூ.13 லட்சம் மதிப்புள்ள சோனி ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்

மின்னணு வர்த்தகத்தில் தனக்கென தனி தரத்தையும் வாடிக்கையாளர்களையும் கொண்டிருக்கும் சோனி நிறுவனம் தன்னுடைய புதிய ஸ்மார்ட் எல்ஈடி டிவியை இந்தியாவில் இன்று (செப்-24) அறிமுகம் செய்திருக்கிறது.

DIN

மின்னணு வர்த்தகத்தில் தனக்கென தனி தரத்தையும் வாடிக்கையாளர்களையும் கொண்டிருக்கும் சோனி நிறுவனம் தன்னுடைய புதிய ஸ்மார்ட் எல்ஈடி டிவியை இந்தியாவில் இன்று (செப்-24) அறிமுகம் செய்திருக்கிறது.

‘சோனி பிராவியா எக்ஸ் ஆர் 85இசட்9ஜே' என்கிற இந்த ஸ்மார்ட் டிவி அதி நவீன தொழில்நுட்ப வசதியில் 85- இன்ச் திரையுடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

’8 கே’எல்ஈடி டிவியான இது சோனி பிராவியா மாடல்களில் முதன்மையானது.

இது குறித்து சோனி நிர்வாகத் தரப்பில் , ‘ சோனியின் இந்தத் தயாரிப்பு பிரம்மாண்டமானது. 8கே எல்ஈடி தொழில்நுட்பத்தில் மிகத் துல்லியமான திரையுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தும் வகையில் உலகமே அவர்களை சுற்றிக்கொண்டிருப்பத்தைப் போன்ற மாயத் தோற்றம் ஏற்படுகிற மாதிரி இதன் துல்லியத்தன்மையும் ஒலி அமைப்பும் இருக்கும் ‘ எனத் தெரிவித்தனர்.

இந்தியாவில் இதன் ஆரம்பவிலையை ரூ.12,99,990 என நிர்ணயம் செய்திருக்கிறார்கள்.

சோனி பிராவியா எக்ஸ்ஆர் 85இசட்9ஜே சிறப்பம்சம் :

* 8 கே எல்ஈடி

* 85-இன்ச் திரை

* டால்பி விசன் மற்றும் டால்பி அட்மாஸ் ஒலி

* எக்ஸ் ஆர் டிரைலுமினஸ்

* கூகுள் வாய்ஸ் 

* எக்ஸ் ஆர் காண்டிராஸ்ட் பூஸ்டர் 15

* எல்ஈடி அர்ரே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT