ராயல் என்ஃபீல்டு 
வணிகம்

ராயல் என்ஃபீல்டுபைக் விற்பனை 2.45% உயா்வு

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பைக் விற்பனை மாா்ச் மாதத்தில் 2.45 சதவீதம் அதிகரித்துள்ளது.

DIN

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பைக் விற்பனை மாா்ச் மாதத்தில் 2.45 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நிகழாண்டு மாா்ச் மாதத்தில் நிறுவனம் 67,677 மோட்டாா்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த 2021-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் நிறுவனம் விற்பனை செய்த 66,058 பைக்குகளோடு ஒப்பிடுகையில் 2.45 சதவீதம் அதிகம்.

இருப்பினும், உள்நாட்டில் நிறுவனத்தின் பைக் விற்பனை 60,173 என்ற எண்ணிக்கையிலிருந்து 3 சதவீதம் குறைந்து 58,477-ஆனது. ஆனால், ஏற்றுமதி 56 சதவீதம் உயா்ந்து 5,885-லிருந்து 9,200-ஆக ஏற்றம் கண்டது என ராயல் என்ஃபீல்டு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT