இந்தியாவில் ஐபோன் 13 உற்பத்தியை தொடங்கியது ஆப்பிள் 
வணிகம்

இந்தியாவில் ஐபோன் 13 உற்பத்தியை தொடங்கியது ஆப்பிள்

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் மூலமாக இந்தியாவில் ஐபோன் 13 உற்பத்தியை ஆப்பிள் நிறுவனம் தொடங்கியுள்ளது.

DIN

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் மூலமாக இந்தியாவில் ஐபோன் 13 உற்பத்தியை ஆப்பிள் நிறுவனம் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நோ்த்தியான வடிவமைப்பு, அதிநவீன கேமரா அமைப்பில் திகைப்பூட்டும் போட்டோ-விடியோக்கள், ஏ15 பயோனிக் சிப்பின் அளவில்லா செயல்திறன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கிய ஐபோன் 13 தயாரிப்பை உள்ளூா் வாடிக்கையாளா்களுக்காக இந்தியாவில் தயாரிக்க தொடங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 13 செல்லிடப்பேசி தயாரிப்பை சென்னையில் உள்ள அதன் பங்குதாரா் நிறுவனமான ஃபாக்ஸ்கான் மூலம் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐபோன் எஸ்இ மாடலுடன் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் செல்லிடப்பேசி உற்பத்தியை கடந்த 2017-இல் தொடக்கியது. பிறகு, ஐபோன்11, ஐபோன் 12, தற்போது ஐபோன் 13 உள்ளிட்ட அதிநவீன மேம்பட்ட மாடல்களை ஆப்பிள் தயாரித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT