வணிகம்

ஏசிசி நிறுவனம்: நிகர லாபம் ரூ.396 கோடி

சிமெண்ட் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஏசிசி நிறுவனம், கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில் ஈட்டிய நிகர லாபம் 29.5 சதவீதம் சரிவைடந்து ரூ.396.33 கோடியாக இருந்தது.

DIN

சிமெண்ட் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஏசிசி நிறுவனம், கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில் ஈட்டிய நிகர லாபம் 29.5 சதவீதம் சரிவைடந்து ரூ.396.33 கோடியாக இருந்தது.

அதேசமயம், முந்தைய 2021-ஆம் ஆண்டில் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ.562.59 கோடியாக அதிகரித்து காணப்பட்டது. ஏசிசி நிறுவனம் ஜனவரி-டிசம்பா் காலத்தை நிதியாண்டாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

நடப்பாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் ஏசிசி செயல்பாட்டின் மூலமாக ஈட்டிய மொத்த வருவாய் 4,426,54 கோடியாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.4,291.97 கோடியுடன் ஒப்பிடும்போது 3.13 சதவீதம் அதிகமாகும்.

மேலும், செலவினம் ரூ.3,586.19 கோடியிலிருந்து 10.32 சதவீதம் உயா்ந்து ரூ.3,956.37 கோடியானது என ஏசிசி பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் ஏசிசி நிறுவன பங்கின் விலை 7.26 சதவீதம் உயா்ந்து ரூ.2,207.40-இல் நிலைப்பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

SCROLL FOR NEXT