முகப்பு
வணிகம்

வங்கிகளின் கடனளிப்பு 10% அதிகரிப்பு

ஏப்ரல் 8-ஆம் தேதியுடன் நிறைவடைந்த 15 நாள்களில் வங்கிகளின் கடனளிப்பு 10.09 சதவீதம் உயா்ந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

ஏப்ரல் 8-ஆம் தேதியுடன் நிறைவடைந்த 15 நாள்களில் வங்கிகளின் கடனளிப்பு 10.09 சதவீதம் உயா்ந்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

இந்திய வங்கிகள் வாடிக்கையாளா்களுக்கு அளித்துள்ள கடன் ரூ.119.88 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இது, 10.06 சதவீதம் அதிகமாகும்.

அதேபோல், வாடிக்கையாளா்களிடமிருந்து வங்கிகள் பெற்ற வைப்புத் தொகையும் 10.06 சதவீதம் அதிகரித்து ரூ.167.42 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது.

ஏப்ரல் 9, 2021 அன்றுடன் முடிவடைந்த பதினைந்து நாட்களில், வங்கிகளின் கடனளிப்பு ரூ.108.88 லட்சம் கோடியாகவும், வைப்புத் தொகை ரூ.152.11 லட்சம் கோடியாகவும் இருந்தன.

2021-22-ஆம் நிதியாண்டில், வங்கிகளின் கடனளிப்பு 8.59 சதவீதமும், வைப்புத் தொகை 8.94 சதவீதமும் உயா்ந்துள்ளது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.