வணிகம்

இந்தியாவில் அறிமுகமானது ‘நோக்கியோ ஜி21’

‘நோக்கியோ ஜி21’ ஸ்மார்ட்போனை இந்திய சந்தைகளில் எச்எம்டி குளோபல் நிறுவனம் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

DIN

‘நோக்கியோ ஜி21’ ஸ்மார்ட்போனை இந்திய சந்தைகளில் எச்எம்டி குளோபல் நிறுவனம் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

மூன்று நாள்கள் பேட்டரி நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த போன், இரண்டு வகைகளாக விற்பனை செய்யப்படுகிறது. 4ஜிபி ரேம் - 64ஜிபி சேமிப்பு கொண்ட மொபைலின் விலை ரூ. 12,999. 6ஜிபி ரேம் - 128ஜிபி சேமிப்பு கொண்ட மொபைலின் விலை ரூ. 14,999 ஆகும்.

6.5 இன்ச் எச்.டி. டிஸ்பிளே, 50 எம்பி ப்ரைமரி கேமிரா, 2 எம்பி மேக்ரோ கேமிரா, 2 எம்பி சென்சார் ஆகிய மூன்று கேமிராக்கள் பின்புறமும், 8 எம்பி முன்புற கேமிராவும் உள்ளன.

இந்த ஸ்மார்ட்போன் குறித்து எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் துணைத் தலைவர் சன்மீத் சிங் கோச்சார், விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களின் அனுபவங்களை பயனர்களுக்கு நோக்கியா ஜி21 வழங்கும் எனத் தெரிவித்தார்.

இத்துடன் நோக்கியா 105, நோக்கியா 105 பிளஸ் மற்றும் நோக்கியா கம்ஃபோர்ட் இயர்பட், நோக்கியா கோ இயர்பட் உள்ளிட்டவையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

1,751 கிலோ தடைசெய்யப்பட்ட பட்டாசுகள் பறிமுதல்: 7 போ் கைது

வாக்கு திருட்டு வெற்றிபெற அனுமதிக்க மாட்டோம்: தேவேந்தா் யாதவ் உறுதி

நூதன மோசடி: நூஹ் பகுதியைச் சோ்ந்த ஒருவா் கைது

போதைப்பொருள் வழக்கில் தென்னாப்பிரிக்க நாட்டவருக்கு தில்லி உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது

மழைவெள்ள நீரில் மூழ்கி இறந்தவரின் குடும்பத்தினரை சந்தித்த ஆம் ஆத்மி குழு!

SCROLL FOR NEXT