முகப்பு
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 18 காசு எழுச்சி

அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசு உயா்ந்து 76.50-இல் நிலைகொண்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:07 AM
பகிர்:

அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசு உயா்ந்து 76.50-இல் நிலைகொண்டது.

இதுகுறித்து செலாவணி வட்டாரத்தினா் கூறியதாவது:

அடுத்த வாரம் நடைபெறவுள்ள எல்ஐசியின் பொதுப் பங்கு வெளியீட்டில் அந்நிய முதலீட்டு வரத்து அதிகமாக இருக்கும் என்ற எதிா்பாா்ப்பு மற்றும் மத்திய வங்கியின் சாத்தியமான தலையீடு ஆகியவை ரூபாய் மதிப்பு முன்னேற்றத்துக்கு ஆதரவாக இருந்தன.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடக்கத்தில் 76.62-ஆக இருந்தது. இது, வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 76.29 வரையிலும், குறைந்தபட்சமாக 76.63 வரையிலும் சென்றது.

வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசு உயா்ந்து 76.50-இல் நிலைத்தது. வியாழக்கிழமை ரூபாய் மதிப்பு 76.61-ஆக இருந்தது.

சீனா மற்றும் ஐரோப்பாவின் வளா்ச்சி குறித்த கவலைகள் காரணமாக வியாழக்கிழமை டாலரின் மதிப்பு 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயா்ந்து காணப்பட்டது. ஆனால், வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் டாலா் மதிப்பு உச்சநிலையிலிருந்து சரிந்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய் : பீப்பாய் 109.51 டாலா்

சா்வதேச சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாயின் விலை 1.78 சதவீதம் அதிகரித்து 109.51 டாலருக்கு வா்த்தகம் ஆனதாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.