வணிகம்

யெஸ் வங்கி: நிகர லாபம் ரூ.367 கோடி

DIN

யெஸ் வங்கி கடந்த நிதியாண்டில் லாப பாதைக்கு திரும்பி நான்காவது காலாண்டில் ரூ.367 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. அதேசமயம், முந்தைய 2020-21 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இவ்வங்கி ரூ.3,788 கோடி நிகர இழப்பைக் கண்டிருந்தது.

2021-22 முழு நிதியாண்டில் இவ்வங்கியின் நிகர லாபம் ரூ.1,066 கோடியை எட்டியது. அதேசமயம், 2021 மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2020-21 நிதியாண்டில் ரூ.3,462 கோடி நிகர இழப்பையும், 2019-20-இல் ரூ.22,715 இழப்பையும் யெஸ் வங்கி சந்தித்தது.

கடந்த 2021-22 நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இவ்வங்கியின் வருவாய் ரூ.4,678.59 கோடியிலிருந்து ரூ.5,829.22 கோடியாக அதிகரித்தது. முழு நிதியாண்டில் வருவாய் ரூ.23,053.53 கோடியிலிருந்து ரூ.22,285.98 கோடியாக குறைந்துள்ளது.

கடந்த மாா்ச் 31 நிலவரப்படி வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் 15.4 சதவீதத்திலிருந்து 13.9 சதவீதமாகவும், நிகர வாராக் கடனளவு 5.9 சதவீதத்திலிருந்து 4.5 சதவீதமாகவும் குறைந்துள்ளதாக யெஸ் வங்கி பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT