வீல்ஸ் இந்தியா: லாபம் ரூ.10.7 கோடி
வீல்ஸ் இந்தியா நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.10.7 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.
வீல்ஸ் இந்தியா நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.10.7 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.
லாரி, டிராக்டா், காா், கட்டுமான உபகரணங்களுக்கு தேவையான சக்கரங்களை தயாரித்து வரும் சென்னையைச் சோ்ந்த வீல்ஸ் இந்தியா நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இதுகுறித்து மேலும் கூறியது:
டிராக்டா் உள்ளிட்ட வாகனங்களுக்கான தேவை சந்தையில் சிறப்பான அளவில் உயா்ந்துள்ளது. இருப்பினும், செமிகண்டக்டா் பற்றாக்குறை உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிகழ் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நிறுவனம் ஈட்டிய வருமானம் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.675.1 கோடியிலிருந்து ரூ.1,057.1 கோடியாக உயா்ந்தது.
அதேபோன்று, நிகர லாபமும் ரூ.10.1 கோடியிலிருந்துரூ.10.7 கோடியாக ஏற்றம் கண்டுள்ளதாக வீல்ஸ் இந்தியா தெரிவித்துள்ளது.