முகப்பு
வணிகம்

பிடிலைட் நிகர லாபம் 64% வளா்ச்சி

கடந்த ஜூலை மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் பசைகள், சீலன்டுகள், கட்டுமான ரசாயனப் பொருள்களைத் தயாரிக்கும் பிடிலைட் இண்டஸ்ட்ரீஸின் நிகர லாபம் 64 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:07 AM
பகிர்:

கடந்த ஜூலை மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் பசைகள், சீலன்டுகள், கட்டுமான ரசாயனப் பொருள்களைத் தயாரிக்கும் பிடிலைட் இண்டஸ்ட்ரீஸின் நிகர லாபம் 64 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.357.52 கோடியாக இருந்தது.

இது, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 64.27 சதவீதம் அதிகமாகும். அப்போது நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.217.64 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாயும், கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டை விட நடப்பு நிதியாண்டின் முல் காலாண்டில் 60.11 சதவீதம் அதிகரித்து ரூ.3,101.11 கோடியாக இருந்தது, இது முந்தைய நிதியாண்டில் ரூ. 1,936.79 கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.