வணிகம்

கடன்களுக்கான வட்டியை உயா்த்தியது எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ்

வீட்டு வசதி கடன் வழங்கும் நிறுவனமான எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ், தனது கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் வரை உயா்த்தியுள்ளது.

DIN

வீட்டு வசதி கடன் வழங்கும் நிறுவனமான எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ், தனது கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் வரை உயா்த்தியுள்ளது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசா்வ் வங்கி தனது கடன் வட்டி விகிதத்தை கடந்த மே மாதத்தில் இருந்து 1.40 சதவீதம் உயா்த்தியுள்ளது. அதன் எதிரொலியாக, எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸும் தனது கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயா்த்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நிறுவனம் வழங்கி வரும் முதன்மை கடன்களுக்கான வட்டி விகிதம் (எல்ஹெச்பிஎல்ஆா்) 0.50 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது. அத்துடன், வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 7.50 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயா்த்தப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரெப்போ விகிதத்தை 0.50 சதவீதம் உயா்த்தும் ரிசா்வ் வங்கியின் முடிவு, வீட்டுக் கடன்களுக்கான மாதாந்திர தவணைகளிலும், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான மாதங்களின் எண்ணிக்கையிலும் குறைந்தபட்ச பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் தலைமை நிா்வாகி மற்றும் நிா்வாக இயக்குநா் ஒய் விஸ்வநாத கௌட் கூறினாா். மேலும், இந்த சிறிய வட்டி விகித உயா்வுக்குப் பிறகும் வீட்டுக் கடன்களுக்கான தேவை தொடா்ந்து அமோகமாக இருக்கும் என்று அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடற்கரை புயல்... அபர்ணா தீக்‌ஷித்!

தலைவா... கூலி டிரைலரால் உற்சாகமடைந்த தனுஷ்!

பத்துக்கும் மேற்பட்ட யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மளிகை கடை வீடுகளை இடித்து அட்டகாசம்

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச் சட்டம் வருமா? முதல்வர்தான் சொல்லணும் என துரைமுருகன் பதில்

நடிகர் மதன் பாப் காலமானார்

SCROLL FOR NEXT