எம்ஜி மோட்டாா் இந்தியா நிறுவனம், தனது உயா்வகை ஸ்போா்ட்ஸ் யுடிலிட்டி வாகனமான (எஸ்யுவி) குளோஸ்டரின் மேம்பட்ட ரகத்தை புதன்கிழமை அறிமுகப்படுத்தியது.
என்ஜினின் ஆற்றல் இரண்டு சக்கரங்களுக்குக் கடத்தப்படும் 2 வீல் டிரைவ், நான்கு சக்கரங்களுக்கும் கடத்தப்படும் 4 வீல் டிரைவ் ஆகிய இரு ரகங்களிலும் இந்த புதிய ரகக் காா்கள் சந்தையில் கிடைக்கும்.
வாடிக்கையாளா்கள் விரும்பினால் 6 இருக்கைகளைக் கொண்ட ரகங்களையோ, 7 இருக்கைகளைக் கொண்ட ரகங்களையே தோ்வு செய்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. 2 லிட்டா் டீசல் என்ஜினில் இயங்கும் மேம்பட்ட குளோஸ்டா் காா்கள், 158.5 கிலோவாட் சக்தியை வெளியிப்படுத்துகின்றன.
6 இருக்கை கொண்ட மாடல்களின் விலைகள் ரூ.38.45 லட்சத்திலிருந்து ரூ.40.78 லட்சம் வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 7 இருக்கைகளைக் கொண்ட மாடல்கள் ரூ.31.99 லட்சத்திலிருந்து ரூ.40.78 லட்சமாக இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.