முகப்பு
வணிகம்

1 டிபி நினைவக வசதியுடன் ’விவோ ஒய் 33 டி' ஸ்மார்ட்போன் அறிமுகம்

விவோ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான  ’விவோ ஒய் 33 டி’ ஸ்மார்ட்போன் நேற்று( ஜன.10)   இந்தியாவில் அறிமுகமானது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:55 AM
பகிர்:

விவோ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான  ’விவோ ஒய் 33 டி’ ஸ்மார்ட்போன் நேற்று( ஜன.10)   இந்தியாவில் அறிமுகமானது.

ஸ்மார்ட்போன் உற்பத்தித் துறையில் அதிகப்படியான விற்பனையை சாத்தியப்படுத்தி வரும் விவோ நிறுவனம் தன்னுடைய அடுத்தடுத்த தயாரிப்புகளை வேகமாக சந்தைப்படுத்தி வருகிறது.

முன்னதாக கடந்த ஜன.5 ஆம் தேதி விவோ வி23 , வி23 புரோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமான நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனும் அறிமுகமாகியுள்ளது.

’விவோ ஒய் 33 டி’ சிறப்பம்சங்கள் :

*6.58 அமொல்ட் 1080 பைட்ஸ் ஃபுல் எச்டி திரை

*மீடியாடெக் டைமென்சிட்டி 680

* உள்ளக நினைவகம் 8 ஜிபி  + கூடுதல் நினைவகம் 128 ஜிபி , மேலும் 1 டிபி வரையிலான மெமரி கார்ட் வசதி

*ஆன்டுராய்ட் 11

*50 எம்பி முதன்மை கேமராவுடன் 50 கூடுதல் லென்ஸ் , 8 எம்பி செல்ஃபி கேமரா

*5000 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி 

இந்தியாவில் ரூ.18,900 ஆக இதன் விற்பனை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவோ விற்பனையகங்கள், அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட தளங்களில் இந்த ஸ்மார்ட்போனைப் பெற்றுக்கொள்ளலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →