முகப்பு
வணிகம்

சரிந்தாலும் 61,200 புள்ளிகளை கடந்தது சென்செக்ஸ்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 12 புள்ளிகள் குறைந்து 61,223 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது.

Updated On : 15 ஜனவரி, 2022 at 6:03 AM
சரிந்தாலும் 61,200 புள்ளிகளை கடந்தது சென்செக்ஸ்
பகிர்:

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 12 புள்ளிகள் குறைந்து 61,223 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 12.27  புள்ளிகள் சரிந்து 61,223.03 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.020 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 2.05 புள்ளிகள் சரிந்து 18,255.75 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 0.011 சதவிகிதம் சரிவாகும்.

Advertisement

பங்கு வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரிவுடன் இருந்த இந்தியச் சந்தைகள் வர்த்தக நேர முடிவில் சரிவிலிருந்து மீண்டது. 

டி.சி.எஸ். பங்கு 1.8 சதவிகிதமும், இன்போசிஸ் பங்கு 1.6 சதவிகிதமும் எல் அன்ட் டி, டெக் மகிந்திரா பங்கு ஒரு சதவிகிதமும் விலை உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.