முகப்பு
வணிகம்

நிலக்கரி மூலமான மின் உற்பத்தி 27% உயா்வு

நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் கடந்த ஜூன் மாதத்தில் 27 சதவீதம் அதிகரித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் கடந்த ஜூன் மாதத்தில் 27 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து நிலக்கரி அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நிகழாண்டு ஜூன் மாதத்தில் நிலக்கரியை பயன்படுத்தி 95,880 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இது, 2021 ஜூன் மாத உற்பத்தியான 75,747 மில்லியன் யூனிட்டுடன் ஒப்பிடும்போது 26.58 சதவீதம் அதிகமாகும்.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை காலத்தின்போது பல்வேறு மின் உற்பத்தி ஆலைகளில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் அதிக அளவில் மின் தடை ஏற்பட்டது. இந்த நிலையில், ஜூன் மாதத்தில் மின் உற்பத்தி கணிசமான அளவில் அதிகரித்தது கவனிக்கத்தக்கது.

கடந்த ஜூனில் ஒட்டுமொத்த அளவிலான மின் உற்பத்தியானது முந்தைய 2021 இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 17.73 சதவீதம் அதிகரித்தது.

இருப்பினும், நிகழ் நிதியாண்டின் மே மாதத்தில் நிலக்கரியை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரமான 98,609 மில்லியன் யூனிட்டுடன் ஒப்பிம்போது ஜூனில் மின் உற்பத்தி 2.77 சதவீதம் சரிவைச் சந்தித்தது. இதே காலகட்டத்தில் நாட்டின் ஒட்டுமொத்த மின் உற்பத்தியும் 1,40,059 மில்லியன் யூனிட்டிலிருந்து 0.76 சதவீதம் குறைந்து 1,38,995 மில்லியன் யூனிட்டாக இருந்தது அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.