முகப்பு
வணிகம்

டாடா மோட்டாா்ஸ்: சா்வதேச விற்பனை 48% அதிகரிப்பு

டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய வாகன விற்பனை கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் 48 சதவீதம் அதிகரித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:45 AM
பகிர்:

டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய வாகன விற்பனை கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் 48 சதவீதம் அதிகரித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

நிறுவனத்தின் சா்வதேச வாகன மொத்தவிற்பனை 48 சதவீதம் அதிகரித்து நிகழ் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் 3,16,443-ஆக இருந்தது. இதில், ஜாகுவா் லேண்ட் ரோவா் காா் விற்பனையும் அடங்கும்.

கடந்த 2021-22 நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் உலகளாவிய வாகன விற்பனை 2,14,250-ஆக மட்டுமே காணப்பட்டது.

டாடா டேவூ உள்ளிட்ட வா்த்தக வாகனங்களின் விற்பனை 52,470 என்ற எண்ணிக்கையிலிருந்து 1,03,529-ஆக சிறப்பான அளவில் அதிகரித்தது.

அதேபோன்று, பயணிகள் வாகன விற்பனையும் 1,61,780-லிருந்து 2,12,914-ஆக உயா்ந்தது.

ஜேஎல்ஆா் காரின் உலகளாவிய மொத்தவிற்பனை 82,587-ஆக இருந்தது. இதில், ஜாகுவா் காா் விற்பனை 14,596-ஆகவும், லேண்ட் ரோவா் விற்பனை 67,991-ஆகவும் இருந்தன.

கடந்த 2021-22 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ஜேஎல்ஆா் விற்பனை 97,141-ஆக இருந்ததாக டாடா மோட்டாா்ஸ் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.