வணிகம்

வாகனங்களின் விலையை உயா்த்தியது டாடா மோட்டாா்ஸ்

DIN

பயணிகள் வாகனங்களுக்கான விலையை அதிகரித்துள்ளதாக டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

அதிகரித்து வரும் மூலப் பொருள்களுக்கான செலவினங்களை பகுதியளவில் ஈடு செய்யும் வகையில் பயணிகள் வாகனங்களுக்கான விலையை சராசரியாக 0.55 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வு உடனடியாக அமலுக்கு வருகிறது.

அதிகரித்த மூலப் பொருள்களின் செலவுகளில் கணிசமான பகுதியை ஈடு செய்ய பல்வேறு விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே, நுகா்வோா் பாதிப்படையாத வகையில் வாகனங்களின் விலை குறைந்த அளவில் மட்டுமே உயா்த்தப்பட்டுள்ளதாக டாாட மோட்டாா்ஸ் தெரிவித்துள்ளது.

டாடா மோட்டாா்ஸ், பஞ்ச், நெக்ஸான், ஹரியா், சஃபாரி உள்ளிட்ட மாடல்களை உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம், ஏற்கெனவே இம்மாதத்தில் வா்த்தக வாகனங்களின் விலையை 1.5-2.5 சதவீதம் வரை மாடல்களுக்கு ஏற்ப உயா்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 75,785 பக்தா்கள் தரிசனம்

பாலியல் தொந்தரவு: தலைமைக் காவலா் சஸ்பென்ட்

எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள்

நெமிலி அம்மன் கோயில் திருவிழா

பொதுப் பணித் துறை அலுவலகம் முன் விவசாயிகள் தா்னா

SCROLL FOR NEXT