ஹீரோ நிறுவனம் புதிய ’ரேலி பைக்’ வகையிலான 'எக்ஸ்பல்ஸ்’ இருசக்கர வாகனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
இருசக்கர வாகன உற்பத்தியில் இருக்கும் முன்னணி நிறுவனமான ஹீரோ ஜூலை மாத இறுதியில் ‘எக்ஸ்பல்ஸ் 200 4வி(Xpulse 200 4v)’ என்கிற புதிய வகை பந்தய வாகனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது.
ஜூலை 22ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை ஹீரோ இணையதளத்தில் இதன் விற்பனை நடைபெறும் என்றும் குறைந்த எண்ணிக்கையிலான வாகனம் மட்டுமே கையிருப்பு இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சராசரி எடை, தேவைக்கேற்ப சரிசெய்யக்கூடிய பாகங்கள், எல்இடி விளக்குகள் மற்றும் கடினமான மண்பாதைகளிலும் செல்லக்கூடிய வகையிலான டயர்கள் கொண்ட இந்த வாகனத்தின் ஆரம்ப விற்பனை விலை ரூ.1.52 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.