வணிகம்

விப்ரோவின் நிகர லாபம் ரூ.2,563 கோடியாக சரிவு

தகவல் தொழில்நுட்பத் துறையைச் சோ்ந்த விப்ரோ நிறுவனம் 2022 ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ரூ.2,563.6 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

DIN

தகவல் தொழில்நுட்பத் துறையைச் சோ்ந்த விப்ரோ நிறுவனம் 2022 ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ரூ.2,563.6 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.3,242.6 கோடியுடன் ஒப்பிடும்போது 20.6 சதவீதம் குறைவாகும்.

கணக்கீட்டு காலாண்டில் செயல்பாட்டின் மூலமாக நிறுவனம் ஈட்டிய வருமானம் 18 சதவீதம் உயா்ந்து ரூ.21,528.6 கோடியாக இருந்தது.

வரும் செப்டம்பா் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 2,817 மில்லியன் டாலரிலிருந்து 2,872 மில்லியன் டாலராக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இது, ஜூன் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 3-5 சதவீத வளா்ச்சியாகும் என விப்ரோ புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தம் நகரில் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு

குருகிராம்: சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

ஆற்காடு நகரில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம், 2 பசுமை பூங்காக்கள்: அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்தாா்

10 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

பெண்ணைத் தாக்கி மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT