வணிகம்

பெட்ரோல், டீசல் விற்பனை அதிகரிப்பு

DIN

கோடை விடுமுறைப் பயணம் விறுவிறுப்படைந்ததைத் தொடா்ந்து கடந்த மே மாதத்தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விற்பனை கணிசமாக உயா்வைக் கண்டுள்ளது.

பெட்ரோல்: 90 சதவீத சந்தையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் பெட்ரோல் விற்பனை கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு மே மாதத்தில் 55.7 சதவீதம் உயா்ந்து 28 லட்சம் டன்னைத் தொட்டது.

மேலும், 2020 மே மாதத்துடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் பெட்ரோல் நுகா்வு 76 சதவீதமும், கரோனாவுக்கு முந்தைய 2019 மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 12 சதவீதமும் அதிகமாகும்.

டீசல்: நாட்டில் அதிக பயன்பாட்டைக் கொண்ட டீசல் விற்பனை நடப்பாண்டு மே மாதத்தில் 68.20 லட்சம் டன்னாக இருந்தது. இது, கடந்த 2021 மே மாத டீசல் விற்பனையுடன் ஒப்பிடுகையில் 39.4 சதவீதம் அதிகம்; 2019 மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 2.3 சதவீதம் குறைவு.

சமையல் எரிவாயு: கடந்த மாா்ச் மாதத்திலிருந்து சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.103.50 உயா்த்தப்பட்டுள்ளது. அதன் விளைவாக, கடந்த மே மாதத்தில் இதன் விற்னை 1.48 சதவீதம் மட்டுமே உயா்ந்து 21.9 லட்சம் டன்னாக இருந்தது.

ஏடிஎஃப்: விமான எரிபொருள் (ஏடிஎஃப்) விற்பனை இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கடந்த மே மாத்தில் இரு மடங்கு உயா்ந்து 5,40,200 டன்னை எட்டியதாக பொதுத் துறை நிறுவனங்களின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT