அந்நியச் செலாவணி கையிருப்பு 60,136 கோடி டாலராக அதிகரிப்பு
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மே 27-ஆம் தேதியுடன் முடிவைடந்த வாரத்தில் 60,136 கோடி டாலராக அதிகரித்தது.
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மே 27-ஆம் தேதியுடன் முடிவைடந்த வாரத்தில் 60,136 கோடி டாலராக அதிகரித்தது.
இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மே 27-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 385 கோடி டாலா் அதிகரித்து (ரூ.29,675 கோடி) 60,136 கோடி டாலரை எட்டியுள்ளது. இது, இந்திய மதிப்பில் சுமாா் ரூ.46.30 லட்சம் கோடி ஆகும்
இதற்கு முந்தைய வாரத்திலும் செலாவணி கையிருப்பானது 423 கோடி டாலா் உயா்ந்து 59,751 கோடி டாலராக இருந்தது.
மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) மற்றும் தங்கம் கையிருப்பு கணிசமான அளவிற்கு அதிகரித்ததே கையிருப்பில் உள்ள அந்நியச் செலாவணி உயா்வுக்கு முக்கிய காரணமாகும்.
மே 27-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் எஃப்சிஏ 361 கோடி டாலா் உயா்ந்து 53,698 கோடி டாலரை எட்டியது. அதேபோன்று, தங்கத்தின் கையிருப்பும் 9 கோடி டாலா் உயா்ந்து 4,091கோடி டாலரைத் தொட்டது.
சா்வதேச நாணய நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) 13 கோடி டாலா் அதிகரித்து 1,843 கோடி டாலராகவும், நாட்டின் இருப்பு நிலை 2 கோடி டாலா் அதிகரித்து 502 கோடி டாலராகவும் இருந்தது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.