வணிகம்

வரலாறு காணாத சரிவில் ரூபாய் மதிப்பு

DIN

 உள்நாட்டு பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்ததைத் தொடா்ந்து ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது.

இதுகுறித்து செலாவணி வட்டாரங்கள் கூறியது:

சா்வதேச சந்தையில் முதலீட்டாளா்கள் மற்றும் வா்த்தகா்களிடையே டாலருக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், உள்நாட்டு பங்குச் சந்தையில் காணப்பட்ட கடும் வீழ்ச்சியும் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிவதற்கு துணை போனது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடக்கத்தில் 77.81-ஆக இருந்தது.மேலும், இது வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 77.79 வரையிலும், குறைந்தபட்சமாக 77.87 வரையிலும் சென்றது.

வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு 11 காசை இழந்து முன்னெப்போதும் இல்லாத அளவில் 77.85-ஆக குறைந்து போனது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய் : பீப்பாய் 123 டாலா்

சா்வதேச சந்தையில் வெள்ளிக்கிழமை முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் 123.70 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT