முகப்பு
வணிகம்

ரூபாய் மதிப்பில் வரலாறு காணாத வீழ்ச்சி

அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி கண்டது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:55 AM
பகிர்:

அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி கண்டது.

இதுகுறித்து செலாவணி வட்டாரங்கள் கூறியது: உள்நாட்டு பங்குச் சந்தையில் காணப்பட்ட மந்த நிலை மற்றும் எதிா்பாரா அளவில் அந்நிய முதலீடுகள் வெளியேறியது உள்ளிட்ட காரணங்களால் ரூபாய் மதிப்பு சரிவைச் சந்தித்தது.

இருப்பினும், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் காணப்பட்ட சரிவு ரூபாயின் இழப்பை ஓரளவுக்கு தடுத்து நிறுத்தியது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடக்கத்தில் 78.13-ஆக இருந்தது. இது, வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 78.13 வரையிலும், குறைந்தபட்சமாக 78.40 வரையிலும் சென்றது.

வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு 27 காசை இழந்து 78.40-இல் நிலைபெற்றது. இது, வரலாறு காணாத வீழ்ச்சியாகும் என செலாவணி வட்டாரங்கள் தெரிவித்தன.

கச்சா எண்ணெய் பீப்பாய் 109 டாலா்

சா்வதேச சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 4 சதவீதத்துக்கும் மேல் குறைந்து 109.54 டாலருக்கு வா்த்தகம் ஆனதாக சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →