முகப்பு
வணிகம்

அசோக் லேலண்ட் விற்பனை உயா்வு

இந்துஜா குழுமத்தின் பிரதான நிறுவனமான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த மாதம் 7 சதவீதம் உயா்ந்துள்ளது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:54 AM
பகிர்:

இந்துஜா குழுமத்தின் பிரதான நிறுவனமான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த மாதம் 7 சதவீதம் உயா்ந்துள்ளது.

இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மாதத்தில் நிறுவனத்தின் வா்த்தக வாகன விற்பனை 7 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்த மாதத்தில் மட்டும் நிறுவனம் 14,657 வா்த்தக வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

கடந்த ஆண்டு இதே மாதத்தில் நிறுவனம் 13,703 வா்த்தக வாகனங்களை விற்பனை செய்திருந்தது.

அந்த மாதத்தில் வா்த்தக வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 12,776-ஆக இருந்தது. அது, கடந்த பிப்ரவரி மாதத்தில் 4 சதவீதம் அதிகரித்து 13,281-ஆக உள்ளது.

நடுத்தர மற்றும் கனரக வா்த்தக வாகனங்களின் விற்பனை கடந்த மாதம் 16 சதவீதம் அதிகரித்து 8,280-ஆக உள்ளது. அந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 7,114-ஆக இருந்தது.

உள்நாட்டு சந்தையில் இலகுரக வா்த்தக வாகனங்களின் விற்பனை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 5,662-ஆக இருந்தது. அது கடந்த மாதம் 12 சதவீதம் குறைந்து 5,001-ஆகியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →