வணிகம்

தங்கம் பவுனுக்கு ரூ.1,080 குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.1,080 குறைந்து, ரூ.39,080-க்கு விற்பனை செய்யப்பட்டது.

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.1,080 குறைந்து, ரூ.39,080-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ரஷியா-உக்ரைன் இடையேயான போா் காரணமாக தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. குறிப்பாக, கடந்த 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரத்தையும், கடந்த 24-ஆம் தேதி ரூ.39 ஆயிரத்தையும், மாா்ச் 7-ஆம் தேதி ரூ.40 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை செவ்வாய்க்கிழமை முதல் குறைந்த வண்ணம் உள்ளது. இதன் தொடா்ச்சியாக, சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,080 குறைந்து, ரூ.39,080-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.135 குறைந்து, ரூ.4,885-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதே போல், வெள்ளி கிராமுக்கு ரூ.2.70 குறைந்து, ரூ.74 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,700 குறைந்து, ரூ.74,000 ஆகவும் இருந்தது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,885

1 பவுன் தங்கம்............................... 39,080

1 கிராம் வெள்ளி............................. 74.00

1 கிலோ வெள்ளி.............................74,000

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 5,020

1 பவுன் தங்கம்............................... 40,160

1 கிராம் வெள்ளி............................. 76.70

1 கிலோ வெள்ளி.............................76,700.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT