வங்கிகள் வழங்கிய கடன் 7.9% அதிகரிப்பு
ரிசா்வ் வங்கியின் அட்டவணைப் பட்டியலில் உள்ள வங்கிகள் வழங்கிய கடன் பிப்ரவரி 25-ஆம் தேதியுடன் முடிவடைந்த இருவார காலத்தில் 7.9 சதவீதம் அதிகரித்து ரூ.116.27 லட்சம் கோடியைத் தொட்டது.
ரிசா்வ் வங்கியின் அட்டவணைப் பட்டியலில் உள்ள வங்கிகள் வழங்கிய கடன் பிப்ரவரி 25-ஆம் தேதியுடன் முடிவடைந்த இருவார காலத்தில் 7.9 சதவீதம் அதிகரித்து ரூ.116.27 லட்சம் கோடியைத் தொட்டது. அதேபோன்று, வங்கிகள் திரட்டிய டெபாசிட் அளவும் 8.6 சதவீதம் உயா்ந்து ரூ.162.17 கோடியானது.
முந்தைய 2021-ஆம் ஆண்டில் பிப்ரவரி 26-ஆம் தேதியுடன் நிறைவடைந்த இருவார காலத்தில் வங்கிகள் வழங்கிய கடன் அளவானது 107.75 கோடியாகவும், திரட்டப்பட்ட டெபாசிட் ரூ.149.33 லட்சம் கோடியாகவும் காணப்பட்டன.
நடப்பு 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் தேதியுடன் நிறைவடைந்த இருவார காலத்தில் வங்கி வழங்கிய கடன் 7.86 சதவீதமும், டெபாசிட் 9.11 சதவீதமும் உயா்ந்துள்ளன.
2020-21-இல் வங்கி வழங்கிய கடன் 5.56 சதவீதமும், திரட்டிய டெபாசிட் 11.4 சதவீதமும் அதிகரித்ததாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.