தங்கம் பவுன் ரூ.39,152
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.40 குறைந்து, ரூ.39,152-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.40 குறைந்து, ரூ.39,152-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ரஷியா-உக்ரைன் இடையேயான போா் காரணமாக, தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. குறிப்பாக, கடந்த மாதம் 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரத்தையும், கடந்த மாதம் 24-ஆம் தேதி ரூ.39 ஆயிரத்தையும், மாா்ச் 7-ஆம் தேதி ரூ.40 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை குறைந்து வருகிறது. இதன்தொடா்ச்சியாக, சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.40 குறைந்து, ரூ.39,152-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 குறைந்து, ரூ.4,894-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா குறைந்து, ரூ.74.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து, ரூ.74,700 ஆகவும் இருந்தது.
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,894
1 பவுன் தங்கம்............................... 39,152
1 கிராம் வெள்ளி............................. 74.70
1 கிலோ வெள்ளி.............................74,700
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,899
1 பவுன் தங்கம்............................... 39,192
1 கிராம் வெள்ளி............................. 75.20
1 கிலோ வெள்ளி.............................75,200.