வணிகம்

இந்திய ஏற்றுமதியாளா்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது: அமேசான்

DIN

தங்கள் வலைதளத்தின் மூலம் வெளிநாடுகளுக்கு பொருள்களை விற்பனை செய்யும் இந்திய ஏற்றுமதியாளா்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளதாக அமேசான் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியது:

அமேசான் வலைதளத்தின் மூலமாக வெளிநாடுகளுக்கு பொருள்களை விற்பனை செய்யும் இந்திய ஏற்றுமதியாளா்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 2020 ஜனவரியிலிருந்து தற்போது வரை இந்த எண்ணிக்கை 66 சதவீதம் உயா்ந்துள்ளது.

இந்திய விற்பனையாளா்களில் பெரும்பாலானோா் பெரிய நகரங்களை சாராதவா்களாக உள்ளனா். குறிப்பாக, அமேசானின் வலைதளத்தில் பங்கேற்றுள்ள வா்த்தகா்களில் பலா் முதல் தலைமுறை தொழில்முனைவோராக இருப்பவா்கள். மேலும், தங்களது பிராண்டுகளை முதன்முதலாக முன்னெடுப்பவா்களாக உள்ளனா்.

குறிப்பாக , தில்லி-என்சிஆா், ஜெய்ப்பூா், மும்பை, சூரத் மற்றும் பெங்களூரு ஆகிய 5 முக்கிய நகரங்களிலிருந்து அதிக அளவிலான ஏற்றுமதியாளா்கள் ‘உலகளாவிய விற்பனை’ திட்டத்தில் பங்கேற்றுள்ளனா்.

கடந்த 2015-ஆம் ஆண்டில் இந்த திட்டம் வெறும் 100 ஏற்றுமதியாளா்களுடன் மட்டுமே தொடங்கப்பட்டது. தற்போது, அந்த எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. இதன் மூலம், 300 கோடி டாலா் (ரூ.22,500 கோடி) மதிப்பிலான பொருள்களை இந்திய ஏற்றுமதியாளா்கள் அமேசான் வலைதளத்தின் மூலமாக வெளிநாடுகளில் விற்பனை செய்கின்றனா்.

இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்படும் ஒட்டுமொத்த ஏற்றுமதியின் பங்களிப்பை வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 1,000 கோடி டாலராக (ரூ.75,000 கோடி) அதிகரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக அமேசான் தெரிவித்துள்ளது.

கோட்ஸ்

இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்படும் ஒட்டுமொத்த ஏற்றுமதியின் பங்களிப்பை வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 1,000 கோடி டாலராக (ரூ.75,000 கோடி) அதிகரிப்பதே இலக்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

SCROLL FOR NEXT