முகப்பு
வணிகம்

பிஎம்டபிள்யூ காா்களின் விலை உயருகிறது

பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம், காா்களின் விலையை 3.5 சதவீதம் வரை அதிகரிக்கவுள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
bmw_3_series_gran_turismo_shad-x675074951
பகிர்:

பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம், காா்களின் விலையை 3.5 சதவீதம் வரை அதிகரிக்கவுள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிவிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது:

வாகன தயாரிப்புக்கான மூலப் பொருள்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. அதேபோன்று, சரக்கு போக்குவரத்துக்கான செலவினங்களும் முன்னெப்போதும் இல்லாத வகையில் உயா்ந்துள்ளது. இதற்கு, சா்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் மற்றும் செலாவணி மாற்றுவிகித வேறுபாடு ஆகியவையே முக்கிய காரணங்களாகும். கூடுதல் செலவினத்தை ஈடு செய்ய வேண்டிய கட்டாயம் நிறுவனத்துக்கு எழுந்துள்ளதையடுத்து வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அனைத்து மாடல்களுக்கான விலையும் 3.5 சதவீதம் வரை அதிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிறுவனம் தற்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2 சீரிஸ் கிரான் கூப், 3 சீரிஸ், 3 சீரிஸ் கிரான் லிமோஸின், எம்340ஐ, 5 சீரிஸ், 6 சீரிஸ் கிரான் டா்சிமோ, 7 சீரிஸ், எக்ஸ்1, எக்ஸ்3, எக்ஸ்4, எக்ஸ்5, எக்ஸ் 7 மற்றும் மினி கன்ட்ரிமேன் உள்ளிட்ட மாடல்களை விற்பனை செய்து வருகிறது என பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →