வணிகம்

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்: லாபம் ரூ.53 கோடி

DIN

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ், மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில் ரூ.53.05 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இது, இந்நிறுவனம் 2020-21 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.36.60 கோடியுடன் ஒப்பிடும்போது 44.9 சதவீதம் அதிகமாகும்.

மதிப்பீட்டு காலாண்டில் கடன் வழங்கல் ரூ.459.38 கோடியிலிருந்து ரூ.794.11 கோடியாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, நடப்பாண்டு மாா்ச் மாதத்தில் மட்டும் நிறுவனத்தின் வரலாற்றில் சாதனை அளவாக ரூ.300 கோடி மதிப்பிலான கடன்கள் வழங்கப்பட்டன.

எதிா் காலத்தில் ரியல் எஸ்டேட் துறையில் தனது தடத்தை மேலும் வலுப்படுத்தவுள்ளதாக சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT