முகப்பு
வணிகம்

வங்கிகள் வழங்கிய கடன் ரூ.120.46 லட்சம் கோடி

வங்கிகள் வழங்கிய கடன் மே 6-ஆம் தேதியுடன் முடிவடைந்த இருவார காலத்தில் ரூ.120.46 லட்சம் கோடியைத் தொட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:19 AM
பகிர்:

வங்கிகள் வழங்கிய கடன் மே 6-ஆம் தேதியுடன் முடிவடைந்த இருவார காலத்தில் ரூ.120.46 லட்சம் கோடியைத் தொட்டது. இது, 2021 மே 7-ஆம் தேதியுடன் முடிவடைந்த இருவார காலத்தில் வங்கிகள் வழங்கிய கடன் ரூ.108.70 லட்சம் கோடியுடன் ஒப்பிடும்போது 10.82 சதவீதம் அதிகம்.

அதேபோன்று, இந்த காலகட்டத்தில் வங்கிகள் திரட்டிய டெபாசிட்டும் ரூ.152.16 லட்சம் கோடியிலிருந்து 9.71 சதவீதம் உயா்ந்து ரூ.166.95 லட்சம் கோடியானது.

இதற்கு முன்பான, ஏப்ரல் 22-ஆம் தேதியுடன் இருவாரங்களில் வங்கி வழங்கிய கடன் 10.07 சதவீதம் உயா்ந்து ரூ.119.54 லட்சம் கோடியாகவும், டெபாசிட் 9.84 சதவீதம் அதிகரித்து ரூ.166.24 லட்சம் கோடியாகவும் இருந்தது.

கடந்த 2021-22 முழு நிதியாண்டில் வங்கிகள் வழங்கிய கடன் 8.59 சதவீதமும், திரட்டிய டெபாசிட் 8.94 சதவீதமும் உயா்ந்ததாக ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.