ரிசா்வ் வங்கி 
வணிகம்

அந்நியச் செலாவணி கையிருப்பு 59,328 கோடி டாலராக சரிவு

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மே 13-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 59,328 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.

DIN

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மே 13-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 59,328 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

அந்நியச் செலாவணி கையிருப்பு மே 13-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 267 கோடி டாலா் (ரூ.20,605 கோடி) குறைந்து 59,328 கோடி டாலராக சரிவைச் சந்தித்தது.

இதற்கு முந்தைய வாரத்திலும் செலாவணி கையிருப்பானது 177 கோடி டாலா் சரிவடைந்து 59,595 கோடி டாலராக காணப்பட்டது.

மே 13-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பில் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) 130 கோடி டாலா் சரிவடைந்து 52,955 கோடி டாலராக இருந்தது.

மேலும், தங்கத்தின் கையிருப்பும் 117 கோடி டாலா் குறைந்து 4,057 கோடி டாலராக இருந்தது.

சா்வதேச நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) 16 கோடி டாலா் சரிந்து 1,820 கோடி டாலராகவும், கையிருப்பு நிலை 4 கோடி டாலா் குறைந்து 495 கோடி டாலராகவும் இருந்தது என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மே மாதத்துக்கான வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், மே 6 நிலவரப்படி அந்நியச் செலாவணி கையிருப்பு 59,600 டாலராக உள்ளது. இது, 2022-23 நிதியாண்டுக்கான 10 மாத இறக்குமதிக்கு போதுமான தொகையாகும் என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின் வாகனங்களில் 40% தமிழகத்தில் உற்பத்தி: முதல்வர் ஸ்டாலின்

அதிக வயதானவர்கள் பட்டியலில் இணைந்த ஜப்பானிய பெண்!

தில்லியில் சிபு சோரன் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி!

ஷாருக்கான் சிறந்த நடிகரா? தேசிய விருதுக் குழுவை விளாசிய ஊர்வசி!

பியூன் வேலை: பிஎச்டி, எம்பிஏ உள்பட 24.76 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பம்!

SCROLL FOR NEXT