வணிகம்

ஃபிளிப்காா்ட் இழப்பு அதிகரிப்பு

இணையதள வா்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பிளிப்காா்ட் நிறுவனத்தின் இழப்பு கடந்த செப்டம்பா் காலாண்டில் ரூ.7,800 கோடியாக அதிகரித்துள்ளது.

DIN

இணையதள வா்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பிளிப்காா்ட் நிறுவனத்தின் இழப்பு கடந்த செப்டம்பா் காலாண்டில் ரூ.7,800 கோடியாக அதிகரித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில், நிறுவனங்களுடனான வா்த்தகம் மற்றும் வாடிக்கையாளா்களுக்கு இணையதளம் மூலம் விற்பனை ஆகிய நடவடிக்கைகள் மூலம் நிறுவனத்துக்கு மொத்தம் ரூ.7,800 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2020-21 நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனத்தின் மொத்த இழப்பு ரூ.5,352 கோடியாக இருந்தது.

இணையதள வா்த்தகத்தில் ஈடுபடும் ஃபிளிப்காா்ட் இன்டா்நெட்டின் இழப்பு மட்டும் கடந்த நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் ரூ.2,907 கோடியாக இருந்து, நடப்பு நிதியாண்டின் இதே மாதங்களில் ரூ.4,399 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

எனினும், நிறுவனத்தின் நிகர வருவாய் 20 சதவீதம் அதிகரித்து சுமாா் ரூ.61,836 கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

SCROLL FOR NEXT