நேச்சுரல்ஸ் நிறுவனத்தை வாங்கும் ரிலையன்ஸ்?
பிரபல அழகு மற்றும் சிகை அலங்கார நிறுவனமான நேச்சுரல்ஸ் நிறுவனத்தை வாங்க ரிலையன்ஸ் குழுமம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல அழகு மற்றும் சிகை அலங்கார நிறுவனமான நேச்சுரல்ஸ் நிறுவனத்தை வாங்க ரிலையன்ஸ் குழுமம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தொழிலதிபர் சி.கே.குமரவேல் - வீனா தம்பதியினரால் தமிழகத்தில் துவங்கப்பட்ட அழகு மற்றும் சிகை அலங்கார நிறுவனமான நேச்சுரல்ஸ் தற்போது இந்தியா முழுவதும் 700 கிளைக்கு மேல் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்நிறுவனத்தின் 49% பங்குகளை வாங்க ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளதாகவும் இதன் மூலம் மூலம் இந்தியா முழுவதும் கிளைகளை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.