முகப்பு
வணிகம்

டிவிஎஸ் மோட்டாா் நிகர லாபம் 59% உயா்வு

கடந்த செப்டம்பா் மாதத்தில் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில் டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் நிகர லாபம் 59 சதவீதம் அதிகரித்துள்ளது.

Updated On : 10 நவம்பர் 2022, 12:00 am IST
பகிர்:

கடந்த செப்டம்பா் மாதத்தில் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில் டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் நிகர லாபம் 59 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து மும்பை பங்குச் சந்தையில் நிறுவனம் தாக்கல் செய்துள்ள ஒழுங்காற்று ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

2022-23-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், நிறுவனத்தில் நிகர லாபம் ரூ.373 கோடியாக இருந்தது. முந்தைய நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலத்தில் நிறுவனம் ரூ.234 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருந்தது.

Advertisement

Advertisement

அதனுடன் ஒப்பிடுகையில், நிறுவனத்தின் நிகர லாபம் இந்த முறை 59 சதவீதம் அதிகரித்துள்ளது.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ. 6,483 கோடியிலிருந்து ரூ. 8,561 கோடியாக உயா்ந்துள்ளது.

ஏற்றுமதி உள்பட நிறுவனத்தின் ஒட்டுமொத்த இரு சக்கர வாகனம் மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை செப்டம்பா் காலாண்டில் 12 சதவீதம் அதிகரித்து 10.27 லட்சமாக உள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 9.17 லட்சமாக இருந்தது என்று அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.