எரிபொருள் விலை உயர்வால் கேரளத்தில் பணவீக்கம் அதிகரிப்பு: முதல்வர்
எரிபொருள் விலை உயர்வால் கேரளத்தில் பணவீக்க அழுத்தம் அதிகரித்துள்ளதாக அந்த மாநில முதல்வர் வி.டி. சதீசன் தெரிவித்தது தொடர்பாக...
எரிபொருள் விலை ஏற்றத்தால் கேரளத்தில் பணவீக்க அழுத்தம் அதிகரித்துள்ளதாக அந்த மாநில முதல்வர் வி.டி. சதீசன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
மேற்காசியாவில் நிலவிவரும் போர்ச்சூழல் காரணமாகவும் உலகலவில் முக்கிய எண்ணெய் வழிப் போக்குவரத்தான ஹோர்முஸ் நீரிணை, வழக்கம்போல் இயங்காமல் உள்ளதாலும் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்துள்ளது.
இதனால் சுமார் நான்கு ஆண்டுகளாக உயராமல் இருந்த பெட்ரோல், டீசலின் விலை கடந்த இரண்டு வாரங்களில் ஐந்து முறை உயர்ந்துள்ளது. இதனுடன், சிஎன்ஜி எரிவாயுவின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில்ல், தில்லி சென்ற முதல்வர் வி.டி. சதீசன், அங்கு பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்து மாநில - மத்திய அரசுக்கான உறவுகள் மற்றும் நிதி சிக்கல்கள் குறித்து இன்று பேசினார்.
அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மத்திய அரசு எண்ணெய் விலையை நான்கு முறை உயர்த்தியுள்ளது. கேரளம் ஒரு நுகர்வு மாநிலம் என்பதால், இந்த விலை உயர்வுகள் கேரளத்தை மிக மோசமாகப் பாதிக்கும்.
வளைகுடா நாடுகளிலிருந்து வரும் பணப் பரிமாற்றங்களே கேரளப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகும். ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே போர் தொடங்கியதிலிருந்து அது மாநிலத்தைப் பெரிதாக பாதித்துள்ளது. இதனால், கேரளத்தில் பணவீக்க அழுத்தம் அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டார்.