விருதுநகரில் 23 கல்குவாரிகளை மூட உத்தரவு! தென்காசியில் நேற்று 18!
தென்காசியில் நேற்று 18 கல்குவாரிகள் மூடப்பட்ட நிலையில், இன்று விருதுநகரில் 23 கல்குவாரிகளை மூட உத்தரவிட்டுள்ளது குறித்து...
விருதுநகர் மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 23 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு உத்தரவிட்டுள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் வந்த புகார்களின் அடிப்படையில் ஆய்வு செய்து நேற்று 18 கல்குவாரிகளை உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று விருதுநகரில் 23 கல்குவாரிகளை மூட உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக இயற்கை வளத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
Advertisement
Advertisement
விருதுநகர் மாவட்டத்தில் கனிமங்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுத்தலை தவிர்க்க புவியியல் மற்றும் சுரங்கத்துறையினரால் மொத்தம் 76 குவாரிகள் ஆளில்லா விமானம் மூலமாக அளவீடு செய்யப்பட்டு அறிக்கை பெறப்பட்டது.
இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர். டி.கே. பிரபு மே 26 ஆம் தேதியான இன்று காலை விருதுநகர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறையினரிடம் கலந்தாய்வு மேற்கொண்டார்.
அமைச்சரின் அறிவுறுத்தலின்படி ஆளில்லா விமானம் மூலம் அளவீடு செய்யப்பட்ட குவாரிகளில் குத்தகை பரப்பிற்கு வெளியே குவாரிப் பணி மேற்கொண்ட 23 குவாரிகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுகின்றன.
மேலும், ஆளில்லா விமானம் அளவீடு அறிக்கையின்படி உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Order Issued to Temporarily Close 23 Stone Quarries in Virudhunagar
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.