ஜூன் 11: சரிந்து முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி! லாபம் பெற்ற நிறுவனங்கள் எவை?
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் பற்றி...
பங்குச்சந்தைகள் இன்று(ஜூன் 11) காலை உயர்ந்து வர்த்தகமான நிலையில் பிற்பகலில் சரிந்து முடிந்துள்ளன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 73,615.99 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலையில் சென்செக்ஸ் உயர்ந்து பின்னர் சரிந்தது. வர்த்தக நேர இறுதியில் 150.63 புள்ளிகள் குறைந்து 73,832.55 புள்ளிகளில் நிலை பெற்றது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 53.35 புள்ளிகள் குறைந்து 23,161.60 புள்ளிகளில் நிறைவு பெற்றது.
Advertisement
Advertisement
சென்செக்ஸ் 30 பங்குகளில் இன்ஃபோசிஸ், எச்.சி.எல். டெக், அதானி போர்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், எடர்னல், பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றின் பங்குகள் சரிந்தன. மஹிந்திரா & மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, சன் பார்மா ஆகியவை உயர்ந்து வர்த்தகமாகின.
நிஃப்டி 50 பங்குகளில் இன்ஃபோசிஸ், அதானி, போர்ட்ஸ், எட்டர்னல், எச்.சி.எல். டெக், ட்ரெண்ட் ஆகியவை அதிக சரிவைச் சந்தித்த நிறுவனங்களாகும். அதேநேரத்தில் ஐசிஐசிஐ வங்கி, எம்&எம், கோட்டக் மஹிந்திரா வங்கி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், கிராஸிம் பங்குகள் உயர்ந்தன.
நிஃப்டி மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.81 சதவீதம், 0.67 சதவீதம் சரிவுடன் வர்த்தகமாகின்றன.
துறை வாரியாக, நிஃப்டி ஐடி, ரியல் எஸ்டேட், நுகர்வோர் சேவைகள், கெமிக்கல் குறியீடுகள் அதிக சரிவைச் சந்தித்த நிலையில் மீடியா, தனியார் வங்கிகள், பார்மா, மீடியா, பங்குகள் உயர்ந்தன.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 95.76 ஆக நிறைவடைந்தது.
பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 1% சதவீதம் குறைந்து ஒரு பேரல் 92.16 டாலராக உள்ளது.
Stock Market Close: Sensex falls 151 pts, Nifty ends at 23,162
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.